வங்கி கிளைகளில் credit card இன் கடன் தொகை ஐ பணமாக செலுத்தினால் 100 ரூபாய் அதிகம்

                                                                                                   

      பொதுவாக கிரெடிட் card இன் கடன்  தொகை ஐ  குறிப்பிட்ட கால தவணைக்குள் கட்ட முடியா விட்டால் நமக்கு அபராத தொகை விதிப்பார்கள்  .ஆனால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே செலுத்தினாலும்  வங்கி கிளைகளில் நேரடியாக செலுத்தினால் 50-100 ரூபாய் அதிகம்  . இவை வங்கிக்கு வங்கி வேறுபடுகின்றன .

ஏன் ?


moneycontrol இணையத்தளம் தரும் ஒரு நல்ல சேவை

 moneycontrol.com இணையதளத்தை உலவிகொண்டிருந்த(நோண்டி ) போது , ஒரு நல்ல  விஷியம்   கண்ணில் பட்டது.அதை இந்த பதிவில்  பகிரலாம்  என்று நினைக்கிறன்.

moneycontrol.com இணையத்தில் வார வாரம் ஒவ்வொரு துறை சார்பாக ,என்னென பங்குகள்  ,உயர்ந்தது வீழ்ந்தது,முக்கிய நிகழ்வுகள் ,செய்திகள் போன்ற வற்றை  நமக்கு இமெயிலில் நமக்கு தருகிறார்கள் .

உதாரணமாக ,மருத்துவம் சார்ந்த துறையில் என்ன முக்கிய நிகழ்வுகள் நடந்தது ,விலை ஏறி /இறங்கியுள்ள பங்குகள் போன்றவற்றை  நமக்கு முழு செய்தியாக தருகிறார்கள்.

Fixed deposit இல் பணம் போடும் முன்

                                 

 Fixed deposit இல் எப்படி  பணம்  போடுவது என்பது எல்லோருக்கும் தெரியும் . அப்படி போடும் முன் சில வழி முறைகளை பின்பற்றினால் லாபம் கூட கிடைக்கும்.இதுபற்றி  எனக்கு தெரிந்த சில நுணுகங்களை இங்கே பகிர விரும்புகிறேன்.




fixed deposit முழுவதும் பாதுகாப்பானது அல்ல.

பணம் போடும் வங்கி திவால் ஆனால் ,நீங்கள் போடும் பணம் கிடைக்க வாய்ப்பு  குறைவு.Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) இல்  நீங்கள் போடும் பணத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு மட்டுமே ,insurance தருகிறரர்கள் .அதாவது ஒரு முதலீட்டாளருக்கு ஒரு வங்கியில் (எல்லா கிளைகளையும்  சேர்த்து) அவர் சேமித்துள்ள பணத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு மட்டுமே insurance உண்டு  .வங்கி திவால் ஆனால் ,நீங்கள் எவ்வளவு போட்டு  வைத்திருந்தாலும் 
உங்களுக்கு 1 லட்சம் மட்டுமே கிடைக்கும்.
இதனை தவிர்க்க ,ஒரே வங்கியில் அனைத்து பணத்தையும் போடாமல் ,2 அல்லது மூன்று வங்கியில் பணம் போட்டால்  பணத்திற்கு பாதுகாப்பானதாக இருக்கும் .