Mutual Funds விரிவான அலசல் -தொடர் 2 (NAV, Mutual Fund வகைகள்)

Mutual Funds உள்ள வகைகளை பார்போம்.

உங்களிடம் பணம் வாங்கி Mutual fund நிறுவனம் வெறும் ஷேர் மார்க்கெட் இல் மட்டும் பணம் போடுவதில்லை.
கிழே உள்ள ,அனைத்திலும் முதலீடு செய்வார்கள். அதற்கு ஏற்ப Mutual Funds இன் பெயர் மாறுபடும்.
Money  Market ,
Corporate Bonds,
Government Bonds,
REPO . (இன்னும் நிறைய ).

Based on FUND Scheme:
   Closed ended/open ended : இதை பற்றி விரிவாக இந்த பதிவில் எழுதி இருக்கிறேன் .

முதலீட்டின் அடிபடையில் :(Based on Asset Invested):
ஒரு Mutual fund  எதில் முதலீடு செய்ய படுகிறதோ,அதன் அடிபடையில் மூன்றாக பிரிக்கலாம்.
 Equity Funds : அதாவது பங்குகளில் முதலீடு செய்தால் Equity Funds என்று பெயர்.
இந்த வகை Fund இல் முழுக்க முழுக்க பங்குகளில் மட்டுமே முதல்ளேடு செய்வார்கள்.
எடுத்துகாட்டு:   SBI Blue Chip Fund .  இதில் பல வகை பிரிவுகள் உண்டு . அதை பற்றி  விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
Debt Funds : ஒரு Mutual Fund  Bonds (கடன் )பத்திரங்களில்  மட்டும் முதலீடு செய்தால் அதற்கு Debt Funds என்று பெயர்.
Hybrid Funds :  Equity மற்றும் Debit இல் கலந்து முதலீடு செய்வது.


Different Types of Mutual Funds By Kotak Securities®

NAV:  (Net Asset value) :

ஒரு Mutual Fund நிறுவனம் Rs.  1000 /-  க்கு  ஒரு  Mutual Fund  தொடங்குகிறார்கள்   என்று  வைத்து  கொள்வோம் . இதை  1 ரூபாய்க்கு 1 unit என்று பிரித்தால்  அந்த  Mutual Fund நிறுவனத்திடம் 1000 Units இருக்கும்.


Suresh மற்றும் Ganesh ஒரு Mutual Funds  இல் முதலீடு செய்ய நினைகிறார்கள்.

Suresh  600 ருபாய் குடுத்து 600 Unit வாங்குகிறார்.

Ganesh  400 ருபாய் குடுத்து 400 Unit வாங்குகிறார்.

Suresh & Ganesh குடுத்த  இந்த 1000 ருபாய் வாங்கி அந்த Mutual Fund மேனேஜர் ,பங்குச்சந்தை இல் முதலீடு செய்வார்.

ஒரு மாதம் கழித்து:

அவர் வாங்கிய  பங்குகள் ஒரு மாதம் கழித்து   1000 ருபாய் இல் இருந்து ஏறி 
 Rs. 1500 க்கு இருக்கிறது என்று வைத்து கொள்வோம்.

இப்போது ,

NAV = (Mutual Fund இன்  இன்றைய   மொத்த மதிப்பு - கடன் )/ Total Units 


       =(1500 -0)/1000
       =1.5

NAV இன் இன்றைய விலை :1.5   

லாபத்தை பிரிக்கும் போது ,

Suresh  க்கு  (600*1.5) = Rs .900  லாபம் .
Ganesh  க்கு  (400*1.5) =Rs . 600   லாபம் .

Note :

  1) NAV   தினமும் Share Market முடிந்த பிறகு கணக்கிடுவார்கள் .
  2)   மேலே கூறிய வற்றில் நிர்வாக  செலவை கணக்கிடவில்லை.
    இதனை EXPENSE RATIO என்று கூறுவார்கள்.  இது 2 -2.5 % இருந்தால் நல்லது.
EXPENSE RATIOmanagement fee + registrar and transfer agent fee, marketing and distribution fee+audit fee +custodian fee.
 3) Exit Load : ஒரு Mutual FUND இணை வாங்கி ஒரு வருடத்திற்குள் விற்றால் ,1% பிடித்து கொண்டு மீதத்தை தருவார்கள். பொதுவாக Mutual FUND இணை 3 வைத்திருந்தால் மட்டுமே நல்ல லாபம் பார்க்கலாம்.




Mutual Funds விரிவான அலசல் -தொடர் 1

 நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பதிவினை எழுதும் வைப்பு கிடைத்தது...
 இதில் Mutual  Funds பற்றி ஒரு தொடராக எழுத நினைக்கிறன்.





one line Story : நீங்களாக  சில பங்குகளை(share)  வாங்கி நிர்வாகம் பண்ணுவதற்கு பதில்  ,ஒரு நிறுவனம் உங்களுக்காக பங்குகளை நிர்வாகம்  செய்தால் அதற்கு பெயர் தான் Mutual funds.

                       * இந்த வகையான Mutual Funds ஐ நிர்வகிபதற்கு என்று Mutual Funds நிறுவனங்கள்   இருக்கின்றன.
                      * இதில் ஒவ்வொரு நிறுவனமும் பல பங்குகளை ஒன்று திரட்டி அதற்கு ஒரு பெயர் வைத்திருக்கும் ,அதற்கு பெயர் FUNDS . ஒரு நிறுவனம் பல funds களை வைத்திருக்கும்.
                      * ஒவ்வொரு FUND இலும் பங்குகளை வாங்கி வைத்திருப்பார்கள்.
                      * அவர்களாக ஒவ்வொரு FUND TYPE , எந்த எந்த பங்குகள் வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு FUND typeக்கு  ஏற்ற படி வைத்திருப்பார்கள் .

எடுத்துகாட்டாக : SBI Mutual Fund  என்ற நிறுவனம் ,கிழே உள்ள Funds ஐ நிர்வகிக்கிறது.

                 

          
                               
                  
       
                     

உதாரணத்திற்கு ,SBI Arbitrage Opportunities Fund - Direct (D)  என்ற  Fund  இல்  கிழே    உள்ள  பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்.






                       * இதை நிர்வகிபதற்கு என்று ஒரு சிறு தொகையை எடுத்து கொள்வார்கள்.(அதிக பட்சமாக 2.8 %.) . இவை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். இந்த தொகை சிறியது என்பதால் நாம் இதை பற்றி அதிகம் கவலை பட தேவை இல்லை.

                        * இன்னும் சில கட்டணங்கள் உண்டு,அவை பற்றி பின்பு ஒரு பதிவில் பார்க்கலாம்.

சாதகங்கள் :
 * ஒரு தேர்ந்த manager இதை நிர்வகித்தால் ,நிறைய லாபம் கிடைக்கும். 
  * நாமாக சில பங்குகளை வாங்கி நஷ்ட படுவதற்கு பதில் இவர்களிடம் கொடுத்தால் ,நஷ்டம் குறையும்.
 * பங்குகள் வாங்கி விற்பதற்கு தரும் கட்டணம் தர தேவை இல்லை. (அதற்கு பதில் மிக குறைந்த அளவே ,நிர்வாக கட்டணம் இருக்கும்.
 * Mutual funds ஐ வாங்குவதற்கு கட்டணம் எதுவும் தேவை இல்லை.
* மிக குறைந்த அளவிலே (500 Rs ) இருந்தாலே ,கணக்கு தொடங்கி விடலாம்.

பாதகங்கள்:
*இதில் உங்களுக்கு பிடித்த பங்குகளை வாங்கி manage பன்னி தாருங்கள் என்று சொல்ல முடியாது.
 
* இதை நிர்வகிக்கும் நிறுவனம் ,சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்றால் ,லாபம் குறையும்.

* பங்குச்சந்தை சரிந்தால் , இவையும் சரியும்.

அடுத்த பதிவில் , NAV  என்றல் என்ன , Mutual Funds இல் உள்ள வகைகளை பார்க்கலாம்.