எளிமையான சொட்டு நீர் பாசனம்.!!




இப்போதெல்லாம் நாம் எல்லா இடங்களிலும் கோக், பெப்சி பாட்டில்களை பார்க்கிறோம். குடித்த பின் இந்த லிட்டர் பாட்டில்களை தூக்கி போட்டு விடுகின்றனர்.

இந்த பாட்டில்களை வைத்து எளிமையான ஒரு சொட்டு நீர் பாசனம் வழி அமைத்து இருக்கிறார்கள் நிகாரகுவா (Nicaragua) நாட்டில்.

ஒரு2 லிட்டர் பாட்டில் எடுத்து, கீழே ஒரு ஓட்டை போட வேண்டும்.
இந்த பாட்டிலை ஒரு குச்சியில் கட்டி வைக்க வேண்டும்.

கிழே பார்த்து இருக்கும் பாட்டில் மூடியை சரியாக திருப்பி வைக்க வேண்டும்.

இப்போது பாட்டிலை நிரப்பினால், சொட்டு நீர் பாசனம் ரெடி.

இவ்வாறாக ஊற்ற படும் நீர் ஒரு நாள் முழுவதும் வரும்.

தேவைக்க ஏற்ப மூடியை திறந்து கொள்ளலாம்.

மாலையில் நீர் நிரப்பினால், இரவு முழுவதும் சொட்டும்.

மாட்டு சாணம் அல்லது எரு போட்டு வைத்தால் அவை மெதுவாக செடிக்கு செல்லும்.

இந்த முறை மூலம் வீணாக போகும் பாட்டில்கள் உபயோக படும்.
மிகுந்த செலவு இல்லாமல் எளிதான சொட்டு நீர் பாசனம் கிடைக்கும்.
.

5 comments:

  1. பாட்டிலை தூக்கி போட்டு மண்ணின் வளத்தை கெடுப்பதற்கு பதிலாக, இவ்வாறு உபயோகமாக செய்வது நல்லது... பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே ! தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே !!!!!

      Delete
  2. நல்ல முறை. தொட்டியில் இருக்கு செடிகளுக்கும் பயன் படுத்தலாம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே !!!!!

      Delete
  3. வணக்கம்
    நல்ல முறை , இது போன்ற புதுமைகளை சொல்லுங்கள்
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்.....

    ReplyDelete