சென்ற பதிவின் கேள்வியுடன் இன்றைய பதிவு....பொதுவாக தீபாவளி சமயத்தில் ,நிறைய பேர் வாகனம் வாங்குவது வாடிக்கை !!! அதனால் அதன் நிறுவனத்தின் பங்குகள் ஏறும் என்பது ஒரு கணிப்பு .ஆனால் சில auto பங்குகள் இறங்கும்..... இதற்கு நிறைய காரணங்கள் உண்டு .
சில சமயம் அதன் பங்குகளின் விலை அளவுக்கு அதிகமாக வர்த்தகம் ஆகி கொண்டிருக்கும்....
தீபாவளி சமயத்தில் வாங்கி விற்றால் லாபம் குறைவாக கிடக்கும் என்று எண்ணி அதற்கு முன்பே அதன் பங்குகளை குறைந்த விலையில் நிறைய வாங்கி வைத்திருப்பார்கள்.. எல்லோரும் வாங்கும் பொது ,தனது பங்குகளை விற்று கொண்டு இருப்பார்கள் ....
உங்களுக்கு என்று ஒரு 10 அல்லது 11 வகையான பங்குகளை போர்ட்போலியோ முறையில் சேர்த்து வைத்து கொண்டு ,அவற்றின் விலை போக்கை தினமும் கவனியுங்கள்...திடீர் என்று விலை ஏறினால் என்ன காரணம் ,இறங்கினால் என்ன காரணம் என்று ,தெரிந்து வைத்து கொள்ளுங்கள்...இதன் மூலம் ஒரு பங்கு ,அதற்கு நல்ல செய்தி அடிபட்டால் ,எந்த அளவிற்கு உயர்கிறது ,கேட்ட செய்தி வந்தால் எவ்வளவு இறங்குகிறது என்பதை கவனியுங்கள்....
இதன் மூலம் அந்த பங்கை நீங்கள் பின்பு வாங்கும்போது ,எந்த அளவிற்கு லாபம் /நஷ்டம் கிடைக்கும் என்பது ஓரளவிற்கு புலப்படும்....அதை வைத்து வாணிபம் செய்யலாம் .
1 மாதம் கழித்து ஒரு பங்கிற்கு ஒரு நல்ல செய்தி வரும் என்று நீங்கள் கணித்து வைத்திருகிறீர்கள் ,இப்போது அந்த பங்கின் விலை குறைவாக இருக்கிறது என்றால் நீங்கள் வாங்கலாம்....பிறகு 1 மாதம் கழித்து விலை ஏறும் பொது விற்று விடலாம்.
ஒருவேளை ,அந்த பங்கு விலை ஏறாமல் இருந்தால் அதன் காரணத்தையும் கண்டு பிடியுங்கள்.பிற்காலத்தில் இது மிகவும் உதவும்...உங்களுக்கு லாபம் கிடைக்க என்றால் உடனே விற்று விடாமல் கொஞ்ச காலம் வைத்திருந்து ,ஓரளவு லாபத்துடன்/அல்லது நஷ்டத்துடன் வெளியேறுங்கள் .நஷ்டமடைந்து விட்டாலும் நீங்கள் ஒரு படிப்பினை கற்று கொண்டு இருப்பீர்கள்...அடுத்த முறை மிக துல்லியமாக கணிக்க இந்த அனுபவம் பொருந்தும்....
எல்லோரும் வாங்கும் போது விற்றுவிடு , எல்லோரும் விற்கும் போது வாங்கு.
இந்த கூற்று ,நீண்ட கால பங்குகளுக்கு மிக பொருந்தும்.....
எடுத்துக்காட்டாக Rakesh Junjunwala VIP என்ற பங்கினை 60-70 ரூபாய்க்கு வாங்கிய போது ,யாரும் அதனை கண்டு கொள்ள வில்லை . ஒரு "பை " நிறுவனம் தானே என்று அதனை பொருட்படுத்த வில்லை....அனால் அவர் அன்று வாங்கிய பங்குகள் ,பிறகு 6 -7 வருடத்திற்கு பின் 800 என்ற அளவில்
கொண்டு இருக்கிறது ..(குறிப்பு:இப்போது பங்கு பிரிப்பின் மூலம் 84 -85 அளவில் வர்த்தகமாகி கொண்டிருகிறது...)...மேலே சொன்ன விதி இனை தான் அவரும் பின்பற்றி இருக்கிறார் . "எல்லோரும் வாங்கும் போது விற்றுவிடு , எல்லோரும் விற்கும் போது வாங்கு:...
இதை நீங்களும் செய்யலாம் .ஒரு நிறுவனத்தின் கடந்த கால செய்ல்பாடை வைத்து ,அடுத்த காலாண்டில் நல்ல லாபம் தருமா என்று கணிக்க கற்று கொள்ளுங்கள்.
ஏக :mahindra & mahindra என்ற நிறுவனத்தின் இந்த காலாண்டு லாபம் அதிகம் என்பதை முன்பே தெரிந்து எல்லோரும் வாங்கி நல்ல லாபம் பார்க்கின்றனர் ....இந்த பங்கினை நீங்கள் முன்பே வாங்கி இப்போது விற்று கொண்டிருக்க வேண்டும்...இப்போது வாங்கினால் லாபம் குறைவாகவோ அல்லது நஷ்டத்துடனோ விற்க வேண்டி வரும்.... இதை over sold என்றும் சொல்லுவார்கள்...
நீங்கள் பங்குசந்தைக்கு புதியவர் என்றால் இங்கு சென்று பங்குசந்தை என்ற தலைப்பின் கீழ் சென்று படிக்கவும் .
நல்ல நுணுக்கங்களை தருகிறீர்கள். தொடருங்கள்.
ReplyDeleteThankyou
Deletefor Source of information ,do you know any other websites than money control and rediff???
ReplyDeleteHi kks,
ReplyDeleteFor Analysis and performance of a stock ,money control is best
For Knowledge on particular topic investopedia.com is best
For day today news,Economic times is best
For updates about non indian markets www.marketwatch.com is best.
Along with this we have to have habit of watching cnbc tv and ndtv on what topic is currently driving the market......
பயனுள்ள, அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... தொடர்கிறேன்...
ReplyDeleteநன்றி...
நன்றி ஐயா !!!
ReplyDeletemany more thanks sir, please continue
ReplyDeleteexcellent ! Nandri..Thodaravum...
ReplyDelete