Mutual Funds இல் முதலீடு செய்வது எவ்வாறு ?

                   

Mutual Funds எனப்படும்   பரஸ்பர நிதி இல் முதலீடு செய்வது  எவ்வாறு என்று பார்ப்போம்   . நிறைய வழிகளில்  முதலீடு  செய்யலாம்.

Mutual  Fund நிறுவனங்களிடம்  நேரிடயாக  முதலீடு செய்வது.

 இந்த  முறையில்  நீங்கள் அருகில் இருக்கும்  Mutual  fund அலுவலகத்திற்கு  சென்று , முதலீடு செய்ய வேண்டும் என்று சொன்னால்   அவர்கள்  உங்களுக்கு  எவ்வாறு செய்வது என்று கூறுவார்கள் . அதிக பட்சம்  Rs 100/-  இல் உங்களுக்கு  கணக்கை  ஆரம்பித்து  கொடுத்து விடுவார்கள் .அதன் பிறகு  நீங்கள் எவ்வளவு  தொகைக்கு  முதலீடு  செய்ய  வேண்டுமோ அதை  செலுத்த வேண்டும்.


SIP எனப்படும் முறை இல் நீங்கள் மாத  மாதம்  அவர்களுக்கு  வங்கி இன்  மூலியமாகவோ  அல்லது  cheque  அல்லது  online  மூலியமாகவோ பணத்தை  செலுத்தலாம் .
ஒருமுறை  மட்டும்  அவர்களிடம் சென்று  தேவையான சான்றுகளை  சமர்ப்பித்து விட்டால் ,பிறகு நீங்கள் online  மூலியமாக  எல்லாவற்றையும் செய்யலாம் . இந்த முறை இல் commission  இல்லை .உங்கள் முழு  பணமும் முதலீடு  செய்யப்படும் .

இந்த முறையில்  Demat  account  தேவை இல்லை .

Agent மூலமாக :

உங்களுக்கு நேரிடையாக  செய்ய முடிய வில்லை என்றால் ,இதற்கு என்று சில mutual  fund  agent கள்  இருப்பார்கள் .அவர்களிடம் தொடர்பு கொண்டால் ,உங்களுக்கு எவ்வாறு செய்ய வேண்டும்  என்று சொல்வார்கள் . உங்கள் நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள் . ஒரு வேலை உங்களுக்கு யாரையும் தெரியாது என்றால் ,மற்றும் ஒருவன் உண்மையான mutual  fund  agent  தானா  என்பது பற்றி அறிய இந்த  இணைய தளத்தில் சென்று  தெரிந்து கொள்ளலாம்.


Mutual Fund Agent  களுக்கு  1 % சதவிகிதம் வரை  commission  தர  வேண்டும் .

Demat Account  மூலமாக :
உங்களுக்கு demat  account  இருக்கிறது  என்றால் ,அந்த  ப்ரோகர் ஐ அழைத்து  எனக்கு Mutual fund  இல்  முதலீடு செய்ய வேண்டும் என்று  சொல்லுங்கள் . அவர்களிடம் அந்த வசதி இருந்தால் உடனே செய்து கொடுப்பார்கள் . 
இவர்களும்  agent கள்  என்பதால் commission  வசூலிப்பார்கள் .
குறைந்தது  1.5 % சதவிகிதம்  அல்லது  ஒரு  பரிவர்த்தனைக்கு (Transaction )  100 ருபாய் விதம்  (HDFC sec ) வசூலிப்பார்கள் .

வங்கி இன் மூலமாக :

இவர்களும் Mutual fund இல்  முதலீடு செய்ய  உதவுகிறார்கள். இவர்களும்  agent களே . commission  வசூலிப்பார்கள் .
உதாரணத்திற்கு , Axis Mutual Fund இல்  முதலீடு செய்பவர்கள் ,axis bank Online website   இல் இருந்து பரிவர்த்தனை செய்தாலும்  ,commision  வசூலிப்பார்கள் .

இலவச இணையதளங்கள் :

எனக்கு தெரிந்து  இலவசமாக  இரண்டு இணையதளங்கள் , முதலீடு செய்ய உதவுகிறார்கள் .

FundsIndia.com :
இந்த இணைய  தளத்தில் நீங்கள்  42 Mutual Fund  நிறுவனங்களின் Fund களில்  online  இல் முதலீடு செய்யலாம்.நல்ல விசியம்  என்னவென்றால்  ஒரு முறை  மட்டும்  சான்றுகளை  சமர்ப்பித்து விட்டால் ,பிறகு எந்த  Mutual fund  யும்  வாங்க முடியும் மற்றும் விற்க முடியும்.

இவர்கள்  நம்மிடம் commission  வாங்குவதில்லை .மாறாக  இவர்களுக்கு  
Mutual fund நிறுவனங்கள், commission தருவார்கள். Funds India  இணையத்தளத்தில் தங்கள் Mutual fund ஐ promote(விளம்பரம் )   செய்வதற்கு commission/பணம்  தருகிறார்கள் . உதாரணத்திற்கு ,நீங்கள்  Funds India   இணையதளத்தின் மூலியமாக HDFC Mutual fund இல்  முதலீடு செய்தால்  ,HDFC   காரர்கள்  Funds India  விற்கு commission தருவார்கள் . 


இந்த  இணையதளத்தில்  முதலீடு  செய்யும் போது  PAN CARD  அவசியம். நீங்கள்  ஒரு கணக்கை தொடங்கி ,ஒரு Mutual fund இல்  முதலீடு செய்தால் FOLIO  NO  தருவார்கள் .இதன் மூலம் நீங்கள் உங்கள் கணக்குகளை  எளிதாக  நிர்வகிக்க  முடியும். அதே போல். PAN CARD  மூலியமாக  எல்லா பரிவர்த்தனையும்  நடப்பதால் ,நமது  முதலீடு  பதுகாப்பாகின்றது . இந்த  இணையத்தளத்தில்  செலுத்திய பணம் பிறகு Mutual fund கம்பனிகளுக்கு  சென்று  உங்கள்  கணக்கில்  நீங்கள்  முதலீடு செய்த தொகைக்கு  எற்ப கணக்கு (NAV units )வைக்கப்படும்.

FundsSuperMart :

இந்த  இணையதளமும் ,மேலே  சொன்னது போல் ,இலவசமாக முதலீடு  செய்ய  உதவுகிறார்கள் .

சில  குறிப்புகள் :


 1) நீங்கள் mutual  fund  இல்  முதலீடு  செய்யும் போது ,நீங்கள்  நிறைய முதலீடு  செய்வதென்றால் Mutual  Fund நிறுவனங்களிடம்  நேரிடயாக  முதலீடு செய்வது சிறந்தது . 
உதாரணத்திற்கு ,10,000 ரூபாய் மாத  மாதம் முதலீடு செய்தால், commission  தொகையாக  1 % ,அதாவது  100 ரூபாய் ,தர வேண்டும். இதுவே  1 வருடத்திற்கு ,1200 ரூபாய் ஆகிறது . அதனால் ,நிறைய முதலீடு செய்பவர்கள் ,சிரமம் பார்க்காமல்  commission  இல்லாத  முறை  இல் முதலீடு செய்வது நலம் .

2)  HDFC Mutual  Fund  ,Axis Mutual Fund  என்பது வேறு ,HDFC  Bank ,AXIS BANK என்பது வேறு .
(இரண்டும் ,ஒரு பெரிய  நிறுவனத்தின்  இரண்டு  கிளை  நிறுவனங்கள் என்றாலும் Axis bank  நல்ல வங்கி என்பதால் ,Axis Mutual  Fund ம் நல்ல நிறுவனம் என்பது தவறான கண்ணோட்டம் .)

HDFC ,AXIS வங்கிக்கு சென்று Mutual Fund  இல்  முதலீடு  செய்ய  வேண்டும்  என்றால் ,ISA (Investment Services account ) என்று ஒன்றை தொடங்கி  அதன் மூலம் Mutual Fund  களை தருவார்கள் .இதற்கு commission  தர வேண்டும்.

அதுவே ,HDFC Mutual fund ,AXIS mutual fund நிறுவனத்திற்கு நேரிடையாக   சென்று  முதலீடு  செய்தால் , commission  இல்லை . அதனால்,
நீங்கள்  வரவு  கணக்கு வைத்துள்ள Bank manager , அவர்களுடைய  Mutual  fund  நிறுவனத்தில் , முதலீடு செய்ய சொன்னால் அது உண்மை இல் நல்ல  mutual  fund ஆ என்பதை  திரிந்து கொண்டு முதலீடு  செய்யுங்கள் .

பின் குறிப்பு : இங்கு நான் பயன்படுத்தி உள்ள வங்கிகளின் பெயர்கள் ,வெறும் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே. 


உங்களுக்கு  என்ன மாதிரியான Mutual Fund களில் முதலீடு  செய்ய வேண்டும் என்பதை ,அலசி  முடிவு எடுங்கள் .எப்படி  அலசுவது பற்றி அடுத்த பதிவில் .

4 comments:

  1. "பணம் பன்னுவது எப்படி". வாருங்கள் வழிகாட்டுகிறோம். ...

    .பங்கு வர்த்தகம் ஒரு சூதாட்டமோ, லாட்டரியோ இல்லை…

    தெளிவான திட்டமிடல், நேர்த்தியான அணுகுமுறை….தொடர்ச்சியா...ன ஆர்வம், தளராத மனநம்பிக்கை இதனோடு கொஞ்சமே கொஞ்சமாய் பணமிருந்தால் போதும்.சாதித்துவிடலாம்….

    சாதிக்கலாம் வாருங்கள்…..

    வாழ்த்துகளுடன்….
    CONTACT :9952331386

    ReplyDelete
  2. "பணம் பன்னுவது எப்படி". வாருங்கள் வழிகாட்டுகிறோம். ...

    .பங்கு வர்த்தகம் ஒரு சூதாட்டமோ, லாட்டரியோ இல்லை…

    தெளிவான திட்டமிடல், நேர்த்தியான அணுகுமுறை….தொடர்ச்சியா...ன ஆர்வம், தளராத மனநம்பிக்கை இதனோடு கொஞ்சமே கொஞ்சமாய் பணமிருந்தால் போதும்.சாதித்துவிடலாம்….

    சாதிக்கலாம் வாருங்கள்…..

    வாழ்த்துகளுடன்….
    CONTACT :9952331386

    ReplyDelete
  3. "பணம் பன்னுவது எப்படி". வாருங்கள் வழிகாட்டுகிறோம். ...

    .பங்கு வர்த்தகம் ஒரு சூதாட்டமோ, லாட்டரியோ இல்லை…

    தெளிவான திட்டமிடல், நேர்த்தியான அணுகுமுறை….தொடர்ச்சியா...ன ஆர்வம், தளராத மனநம்பிக்கை இதனோடு கொஞ்சமே கொஞ்சமாய் பணமிருந்தால் போதும்.சாதித்துவிடலாம்….

    சாதிக்கலாம் வாருங்கள்…..

    வாழ்த்துகளுடன்….
    CONTACT :9952331386

    ReplyDelete