Mutual Funds விரிவான அலசல் -தொடர் 1

 நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பதிவினை எழுதும் வைப்பு கிடைத்தது...
 இதில் Mutual  Funds பற்றி ஒரு தொடராக எழுத நினைக்கிறன்.





one line Story : நீங்களாக  சில பங்குகளை(share)  வாங்கி நிர்வாகம் பண்ணுவதற்கு பதில்  ,ஒரு நிறுவனம் உங்களுக்காக பங்குகளை நிர்வாகம்  செய்தால் அதற்கு பெயர் தான் Mutual funds.

                       * இந்த வகையான Mutual Funds ஐ நிர்வகிபதற்கு என்று Mutual Funds நிறுவனங்கள்   இருக்கின்றன.
                      * இதில் ஒவ்வொரு நிறுவனமும் பல பங்குகளை ஒன்று திரட்டி அதற்கு ஒரு பெயர் வைத்திருக்கும் ,அதற்கு பெயர் FUNDS . ஒரு நிறுவனம் பல funds களை வைத்திருக்கும்.
                      * ஒவ்வொரு FUND இலும் பங்குகளை வாங்கி வைத்திருப்பார்கள்.
                      * அவர்களாக ஒவ்வொரு FUND TYPE , எந்த எந்த பங்குகள் வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு FUND typeக்கு  ஏற்ற படி வைத்திருப்பார்கள் .

எடுத்துகாட்டாக : SBI Mutual Fund  என்ற நிறுவனம் ,கிழே உள்ள Funds ஐ நிர்வகிக்கிறது.

                 

          
                               
                  
       
                     

உதாரணத்திற்கு ,SBI Arbitrage Opportunities Fund - Direct (D)  என்ற  Fund  இல்  கிழே    உள்ள  பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்.






                       * இதை நிர்வகிபதற்கு என்று ஒரு சிறு தொகையை எடுத்து கொள்வார்கள்.(அதிக பட்சமாக 2.8 %.) . இவை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். இந்த தொகை சிறியது என்பதால் நாம் இதை பற்றி அதிகம் கவலை பட தேவை இல்லை.

                        * இன்னும் சில கட்டணங்கள் உண்டு,அவை பற்றி பின்பு ஒரு பதிவில் பார்க்கலாம்.

சாதகங்கள் :
 * ஒரு தேர்ந்த manager இதை நிர்வகித்தால் ,நிறைய லாபம் கிடைக்கும். 
  * நாமாக சில பங்குகளை வாங்கி நஷ்ட படுவதற்கு பதில் இவர்களிடம் கொடுத்தால் ,நஷ்டம் குறையும்.
 * பங்குகள் வாங்கி விற்பதற்கு தரும் கட்டணம் தர தேவை இல்லை. (அதற்கு பதில் மிக குறைந்த அளவே ,நிர்வாக கட்டணம் இருக்கும்.
 * Mutual funds ஐ வாங்குவதற்கு கட்டணம் எதுவும் தேவை இல்லை.
* மிக குறைந்த அளவிலே (500 Rs ) இருந்தாலே ,கணக்கு தொடங்கி விடலாம்.

பாதகங்கள்:
*இதில் உங்களுக்கு பிடித்த பங்குகளை வாங்கி manage பன்னி தாருங்கள் என்று சொல்ல முடியாது.
 
* இதை நிர்வகிக்கும் நிறுவனம் ,சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்றால் ,லாபம் குறையும்.

* பங்குச்சந்தை சரிந்தால் , இவையும் சரியும்.

அடுத்த பதிவில் , NAV  என்றல் என்ன , Mutual Funds இல் உள்ள வகைகளை பார்க்கலாம்.