பங்கு வாங்குவதற்கு முன் -(பங்குச்சந்தை ரகசியங்கள்-1 )

வணக்கம் ,இந்த பதிவில் இருந்து  ,பங்குச்சந்தை இல் எவ்வாறு லாபம் சம்பாதிப்பது,பங்கு வாங்குவதற்கு முன் என்ன என்ன கருத்தில் கொள்ள வேண்டும்.....மற்றும் எனது/ அனுபவங்கள் ஆகியவற்றை தொடராக எழுதலாம் என்று நினைக்கிறேன் ...... இந்த தொடரை எழுதுவதற்கு முன்  எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை சொல்லி  விடுகிறேன்.
1)4 வருடம் பங்குச்சந்தை இல் பங்குகளை வாங்கி விற்ற   அனுபவம்...
2)3 வருடம் Morganstanley  என்ற நிறுவனத்தில்  92 வகையான asset  class இல் பணிபுரிந்த அனுபவம்...
3)பங்குச்சந்தை இல் அனுபவம் பெற்ற  நிறய நண்பர்களின் வழிகாட்டுதல் .

இனி பதிவு..

பங்கு வாங்குவதற்கு முன்:

பங்குச்சந்தை இல் பங்குகளை  வாங்கி விற்பதற்கு ,நிறைய படிக்க வேண்டும் ....நிறைய விசியங்களை  நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்... source  of  information என்பது நிறைய இருக்க வேண்டும்....பங்குச்சந்தை பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை காது  கொடுத்து கேட்க வேண்டும்...நிறைய விசியங்களை கேட்டுக்  கொண்டு , நீங்கள் முடிவு எடுக்க வேண்டும்....நீங்கள் மட்டுமே....அவர் அப்படி  சொன்னார் இவர்  இப்படி  சொன்னார் என்று ,அவர்கள் வழி செல்லாமல் அனைவரின் அனுபவங்களை கேட்டு  கொண்டு ,உங்களுக்கு எது சரி படுகிறதோ அதன் படி செய்யுங்கள் ..

சரி, என்ன என்ன  source  of  information .....

1)உங்களுக்கு என்று 3 அல்லது 4 வகையான இனயதளத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் ..அதில் என்ன என்ன விசயங்கள் தகவல்கள் சொல்கிறார்கள் என்று தினமும் படியுங்கள்... அப்படி முடியாதவர்கள் moneycontrol  இணையதளத்தை படித்தால் போதும்...இது புதியவர்களுக்கு  சற்று குழப்பமாக இருக்கும்....இதனை விரும்பாதவர்கள் rediff money என்ற இணையத்தளத்தில் படிக்கலாம்.  
2)தினமலர்  இல் வர்த்தகம் பகுதி இல் நிறைய விசியங்களை எழுதுவார்கள்...அதனையும் படியுங்கள்.
3)நாணயம் விகடன் கட்டாயம் படிக்க வேண்டும்....
4)பங்குச்சந்தை தொலைகாட்சி களான ndtv  profit  cnbc  live   ஆகியவற்றை தினமும் 1 மணி நேரம் ஆவது பார்க்க வேண்டும் .
5) தினமும் ஒரு புதிய பங்கினை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள் . link 
6) Reuters    என்ற இணையத்தளத்தில் உள்ள  link ல் ,பதிவு செய்து கொண்டால்,தினமும் அன்றாட செய்தினை அனுப்புவார்கள்....இவை மிக பயனுள்ளதாக இருக்கும் .

இது போல் இன்னும் உங்களுக்கு என்ன என்ன வழிகளில் விசியங்களை  தெரிந்து கொள்ள வேண்டுமோ தெரிந்து கொள்ளுங்கள்....

பிறகு ?

தெரிந்த விசியங்களை வைத்துகொண்டு நடைமுறை இல்  பங்குச்சந்தை களின் ஏற்ற இறக்கங்களை  கணிக்க வேண்டும்.... 

எப்படி  ? 

தீபாவளி வந்தால்  தங்கத்தின்  விலை அதிகமாகும் என்று உங்களுக்கு தெரிவது போல , அதே தீபாவளி வந்தால் tata  motors ,hero motor  corp  ,bajaj   போன்ற automobile துறை பங்குகள் இன் விலை  சற்று அதிகமாகும் என்பதயும் தெரிந்து கொள்ள வேண்டும்......ஏன் என்று உங்களுக்கு தெரியும் .....ஆனால் ? இது பங்குச்சந்தை ,நீங்கள் ஒன்று  யோசித்தால்  மற்றவர்கள்  ஒன்று யோசிப்பார்கள் .....
சில சமயம் அதே automobile  பங்குகளின் விலை  தீபாவளி சமயத்தில்  குறையும் ...ஏன் ?

 ----------------------------------------------------------------மீண்டும் சந்திப்போம் 

16 comments:

 1. thankyou very intersting article

  ReplyDelete
 2. விளக்கமான பகிர்வு... தொடர்கிறேன்...

  நன்றி...

  ReplyDelete
 3. வணக்கம் நண்பரே! வெகு நாட்களுக்குப்பிறகு சந்திக்க முடிகிறது. தொடர்ந்து எழுதுங்கள்! தொடருக்கு காத்திருக்கிறோம்!

  ReplyDelete
 4. நன்றி !!!!!!! கொஞ்ச நாட்கள் எழுத முடியாமல் போயிற்று ....இனி தொடர்ந்து எழுதுகிறேன்...
  நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி !!!!!!

  ReplyDelete
 5. Thank you for the information.

  ReplyDelete
 6. தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
 7. https://zerodha.com/open-account?c=RS0164


  Join our growing community of 1.5 lakh traders!
  – The smartest trading technology and platforms
  – ₹0 equity investments and flat ₹20 intraday trades.

  ReplyDelete
 8. Enaku pannu santhu pattri sutha maga thariya Thu ithu pathina thaval sollavum

  ReplyDelete
 9. Enaku pannu santhu pattri sutha maga thariya Thu ithu pathina thaval sollavum

  ReplyDelete