Mutual Funds விரிவான அலசல் -தொடர் 1

 நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பதிவினை எழுதும் வைப்பு கிடைத்தது...
 இதில் Mutual  Funds பற்றி ஒரு தொடராக எழுத நினைக்கிறன்.

one line Story : நீங்களாக  சில பங்குகளை(share)  வாங்கி நிர்வாகம் பண்ணுவதற்கு பதில்  ,ஒரு நிறுவனம் உங்களுக்காக பங்குகளை நிர்வாகம்  செய்தால் அதற்கு பெயர் தான் Mutual funds.

                       * இந்த வகையான Mutual Funds ஐ நிர்வகிபதற்கு என்று Mutual Funds நிறுவனங்கள்   இருக்கின்றன.
                      * இதில் ஒவ்வொரு நிறுவனமும் பல பங்குகளை ஒன்று திரட்டி அதற்கு ஒரு பெயர் வைத்திருக்கும் ,அதற்கு பெயர் FUNDS . ஒரு நிறுவனம் பல funds களை வைத்திருக்கும்.
                      * ஒவ்வொரு FUND இலும் பங்குகளை வாங்கி வைத்திருப்பார்கள்.
                      * அவர்களாக ஒவ்வொரு FUND TYPE , எந்த எந்த பங்குகள் வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு FUND typeக்கு  ஏற்ற படி வைத்திருப்பார்கள் .

எடுத்துகாட்டாக : SBI Mutual Fund  என்ற நிறுவனம் ,கிழே உள்ள Funds ஐ நிர்வகிக்கிறது.

                 

          
                               
                  
       
                     

உதாரணத்திற்கு ,SBI Arbitrage Opportunities Fund - Direct (D)  என்ற  Fund  இல்  கிழே    உள்ள  பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்.


                       * இதை நிர்வகிபதற்கு என்று ஒரு சிறு தொகையை எடுத்து கொள்வார்கள்.(அதிக பட்சமாக 2.8 %.) . இவை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். இந்த தொகை சிறியது என்பதால் நாம் இதை பற்றி அதிகம் கவலை பட தேவை இல்லை.

                        * இன்னும் சில கட்டணங்கள் உண்டு,அவை பற்றி பின்பு ஒரு பதிவில் பார்க்கலாம்.

சாதகங்கள் :
 * ஒரு தேர்ந்த manager இதை நிர்வகித்தால் ,நிறைய லாபம் கிடைக்கும். 
  * நாமாக சில பங்குகளை வாங்கி நஷ்ட படுவதற்கு பதில் இவர்களிடம் கொடுத்தால் ,நஷ்டம் குறையும்.
 * பங்குகள் வாங்கி விற்பதற்கு தரும் கட்டணம் தர தேவை இல்லை. (அதற்கு பதில் மிக குறைந்த அளவே ,நிர்வாக கட்டணம் இருக்கும்.
 * Mutual funds ஐ வாங்குவதற்கு கட்டணம் எதுவும் தேவை இல்லை.
* மிக குறைந்த அளவிலே (500 Rs ) இருந்தாலே ,கணக்கு தொடங்கி விடலாம்.

பாதகங்கள்:
*இதில் உங்களுக்கு பிடித்த பங்குகளை வாங்கி manage பன்னி தாருங்கள் என்று சொல்ல முடியாது.
 
* இதை நிர்வகிக்கும் நிறுவனம் ,சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்றால் ,லாபம் குறையும்.

* பங்குச்சந்தை சரிந்தால் , இவையும் சரியும்.

அடுத்த பதிவில் , NAV  என்றல் என்ன , Mutual Funds இல் உள்ள வகைகளை பார்க்கலாம்.ரோல்ஸ் ராய்ஸ(Rolls Royce)காரை குப்பை அள்ள பயன் படுத்திய இந்திய மகாராஜா ஒரு நாள் லண்டனுக்கு வருகை தந்த நிஜாம்  மன்னர் (ஹைதராபாத் )ஜெய் சிங் மகராஜர், அங்குள்ள தெருக்களில் சாதாரண உடையில் உலா வந்தார். அங்கே ரோல்ஸ் ராய்ஸ் வாகன விற்பனை கண்காட்சியகத்தை பார்த்தார். உள்ளே சென்று அந்த வாகனத்தின் விலை மற்றும் தனித்திறமைகளை அறிந்துகொள்ள விரும்பினார். ஆனால் அங்குள்ள நபர், இவர் ஒரு ஏழை இந்தியக் குடிமகன் என்று எண்ணி, வெளியே போக சொல்லிவிட்டார். மனமுடைந்த ஜெய் சிங் மகராஜர், தன் விடுதி அறைக்கு வந்து, தன வேலை ஆட்களை காட்சியகத்திற்கு சென்று, ஆழ்வார் நகரத்து ராஜா உங்கள் வாகனத்தை வாங்க விருப்பம் தெரிவித்தார் என்று கூறி வரச்செய்தார். சிறிது நேரம் கழித்து, தன் ராஜ உடையில், கம்பீரமான நடையுடன் ரோல்ஸ் ராய்ஸ் காட்சியகத்திற்கு வந்தார், அங்கே அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் பெரும் மரியாதைய்டன் நடந்தது. அங்குள்ள அனைவரும் பணிந்து மன்னரை வரவேற்றனர். அங்குள்ள ஆறு கார்களையும் மன்னர் உடனடியாக பணம் செலுத்தி பெற்றுக்கொண்டார்.


மன்னர் பின்பு இந்தியா வந்தடைந்ததும், அந்த ஆறு கார்களையும் மாநகராட்சி துறைக்கு அனுப்பி, இந்த கார்களை ஊரை சுத்தம் படுத்துவதற்கும், குப்பைகளை ஏற்றுவதற்கும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டார். இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது. ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மதிப்பு குறைய ஆரம்பித்தது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அந்த கார்களை பயன்படுத்துபவர்களை ஏளனமாக பார்க்க ஆரம்பித்தனர். "இந்தியாவில் குப்பை அள்ள பயன்படுத்தும் காரை தான் நீ வைத்திருக்காயா" என்று கிண்டல் செய்தனர்.


இதனால் அந்த நிறுவனத்தின் விற்பனை குறையத் தொடங்கியது. மேலும் அவர்களது வருமானம் பெரிதும் சரிந்தது. உடனே அந்த நிறுவனம், மன்னிப்பு கோரியும், தவறை உணர்ந்ததாகவும், குப்பை அள்ளுவதை நிறுத்தும் படியும், மன்னருக்கு தந்தி அனுப்பப்பட்டது. அதுமட்டுமில்லாமல், மன்னருக்கு ஆறு கார்கள் பணம் பெற்றுக்கொள்ளாமல் அனுப்பப்பட்டது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாடம் கற்றுகொண்டதை அறிந்த மன்னர், உடனடியாக அவைகளை நிறுத்தி வேறு விடயத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்.

இந்த இந்திய மாமன்னரை உலகம் மறவாமல் அனைவரும் இருக்க பகிரவும்...

2008-2013 வருடத்தில் அதிக லாபத்தை /நஷ்டத்தை ஏற்படுத்திய பங்குகள்


Motilal oswal  என்ற நிறுவனம்  நடத்திய  ஆராய்ச்சில் (2008 -2013) சந்தை  மதிப்பை அதிக படுத்திய 
பட்டியலை வெளியட்டுள்ளனர் .இதில் மிக அதிகமாக /வேகமாக/மற்றும் நிலையான செல்வத்தை  பெருகியதற்கான பட்டியல் கிழே கொடுத்துள்ளேன்.அதிக லாபத்தை  ஏற்படுத்திய பட்டியல் :இந்த ஆராய்சி ஒவ்வொரு வருடமும்  டிசம்பர் மாதம்  வெளிஇடப்படும் .
இதில்     asian  paints  ,itc ,hdfc  போன்ற பங்குகள்  ஒவ்வொரு வருடமும் இதில் இடம்  பிடித்துள்ளன . இப்போதும் இந்த பங்குகளை  விலை  குறையும்  போது நாம் வாங்கி  வந்தால் 2-3 வருடத்தில்  சிறந்த பலனை (20 % அதிகமான )எதிர் பார்க்கலாம் .
அதிக நஷ்டத்தை  ஏற்படுத்திய பட்டியல் :
இதில்  பொது துறை நிறுவனங்கள் ,அம்பானி சகோதரர்கள் ஆகியவற்றின் பங்குகள் தான் கடும் சரிவை சந்தித்துள்ளன .

கடந்த 10 வருடத்தில் அதிக லாபம்/நஷ்டம்  அடைந்த துறைகள் :


தனித்துவமான உத்திகள்  மூலம் திறமையாக செயல்படும் 5 நிறுவனங்கள் :
தங்கள் துறைகளில் அதிக சந்தை மதிப்பு/ மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு முன்னோடியாக இருக்கும் நிறுவனங்கள் :

தங்கள் தொழிலில்  இருந்து மாறி லாபம் சம்பாதித்த  சிறந்த 5 நிறுவனங்கள் :
அடுத்து,புதிதாக அதிக சந்தை மதிப்பை உருவாக்கபோகும்  நிறுவனகள்:
அடுத்து,புதிதாக நிரந்தரமான/நிலையான  சந்தை மதிப்பை   தரப்போகும் நிறுவனகள்:

இநத பதிவு பிடித்திருந்தால்  உங்கள் நண்பர்களுக்கு  பகிரவும்.
.

 share


online இல் PAN CARD வாங்குவது எப்படி:video பதிவுவணக்கம் நண்பர்களே ,


இந்த பதிவில் online  இல் pan card  வாங்குவது என்று விளக்கி உள்ளேன்.

PAN card ஐ இரண்டு நிறுவனங்கள் தருகிறார்கள் .

NSDL மற்றும் UTTSL  ஆகிய நிறுவனங்கள் .இந்த இரு நிறுவனமும் மத்திய அரசு நிறுவனங்கள் .

நான் இந்த பதிவில் NSDL  நிறுவனத்தின் இணைய தளத்தின் மூலம் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம் .

இதற்கு ஆகும் செலவு 96 ரூபாய் . 

இந்த link இல் சென்ற பிறகு ,இந்த வீடியோ வை பாருங்கள் .    Invest Now in Gold ETF/MF's for Free.

இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் . 
                                                             


ஆன்லைனில் வில்லங்க சான்று ,திருமணத்தை பதிவு செய்ய,லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெறுவது எப்படி

ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

Mutual Funds இல் முதலீடு செய்வது எவ்வாறு ?

                   

Mutual Funds எனப்படும்   பரஸ்பர நிதி இல் முதலீடு செய்வது  எவ்வாறு என்று பார்ப்போம்   . நிறைய வழிகளில்  முதலீடு  செய்யலாம்.

Mutual  Fund நிறுவனங்களிடம்  நேரிடயாக  முதலீடு செய்வது.

 இந்த  முறையில்  நீங்கள் அருகில் இருக்கும்  Mutual  fund அலுவலகத்திற்கு  சென்று , முதலீடு செய்ய வேண்டும் என்று சொன்னால்   அவர்கள்  உங்களுக்கு  எவ்வாறு செய்வது என்று கூறுவார்கள் . அதிக பட்சம்  Rs 100/-  இல் உங்களுக்கு  கணக்கை  ஆரம்பித்து  கொடுத்து விடுவார்கள் .அதன் பிறகு  நீங்கள் எவ்வளவு  தொகைக்கு  முதலீடு  செய்ய  வேண்டுமோ அதை  செலுத்த வேண்டும்.

நகை கடைக்காரர்கள் எவ்வாறு சம்பாரிக்கிறார்கள்


 

இந்த கட்டுரை இணையத்தில் இருந்து  தொகுக்கப்பட்டது  . 


நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு
மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான
தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது
" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி
அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். '
சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"
அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்
கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.