ஏங்க நாம வாங்குற பங்கு மட்டும் ஏறவே மாட்டிங்குது::பங்குச்சந்தை ரகசியங்கள்-3

  ஏங்க நாம வாங்குற பங்கு மட்டும் ஏறவே மாட்டிங்குது ,
நாம வாங்கிட்டா அதுக்கு அப்புறம் ஒரே அடியா இறங்கிடுத்து . இன்னும் சிலபேர் ,
எவ்வளவு நல்ல பங்கா இருந்தாலும் சரி சொல்லு,நான் வாங்கின அப்புறம் பாரு ,என்ன நடக்குதுன்னு ..
என்று இப்படி ஒரு பங்கின் தலை எழுத்தையே மாற்ற கூடிய வல்லமை நாம் அந்த பங்கை வாங்குவதா வேண்டாமா என்ற முடிவில் தான் இருக்கிறது என்று நாம் சொல்லி புலம்பி கொண்டிருப்போம் . 
சிரிக்காதிங்க !!!,நாமும் இப்படிதான் ஒரு நாள் புலம்பி இருப்போம் .



என்ன காரணம் என்று deep ஆகா நமது medulla oblangata  வில் யோசித்து பார்த்தல் , எல்லாம் நம் விதி என்ற முடிவிற்கு வந்திருப்போம் .


நாம் ஒரு பங்கை சரியான நேரத்தில் மற்றும் குறைந்த விலை இல்  வாங்காததே முக்கிய காரணமாக இருக்கும் .


பொதுவாக ,இரண்டு விசியங்களை பார்க்க வேண்டும் . நாம் வாங்கும் பங்கு நீண்ட காலம் மற்றும் நடுத்தர காலத்திற்கு என்று முடிவு செய்து விட்டால் ,மொத்த  பங்குச்சந்தை எவ்வாறு இருகிறது என்று பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் பங்கு ,பங்குச்சந்தை மேலே போகும்  போதும் வீழ்ச்சின் போதும் எவ்வாறு இருந்தது ,என்பதை பாருங்கள் .

சில பங்குகள் ,பங்குசந்தையுடன் பயணித்து செல்லும் . பங்குச்சந்தை மேலே போனால் இதுவும்  மேலே போகும்..வீழ்ந்தாலும் பங்குசந்தையுடன் சேர்ந்து விழும் .

பெரும்பாலான பங்குகள் இதேபோல் இருக்கும். இந்த மாதிரி பங்குகளை வாங்குவதா வேண்டாமா என்று ஆராயும்போது ,மொத்த  பங்குச்சந்தை இன் நிலைமை ஐ கருத்தில் கொண்டு வேண்டும்.

இப்போது பங்குச்சந்தை (19-Jan-2013) அன்று இரண்டு வருட உயர்வில் இருக்கிறது . இது இன்னும் மேலே போகுமா அல்லது கீழே விழுமா என்று யாருக்கும் தெரியாது .சில பேர் நிச்சியமாக மேலே போகும் என்று அடித்து சொல்வார்கள் (என்னமோ அவர்கள் சொல் படிதான் நடக்கிறது என்று ஒரு நினைப்பு).
பங்குச்சந்தை யார் சொல்படியும் நடக்காது .அப்படி நடந்தால் அதை ஏன் உங்களிடம் சொல்கிறார்கள் ,அவர்களே  வாங்கி லாபம் பார்கலாமே .

டிவி இல் பத்திரிகைகளில் ,பங்குகளை வாங்க இது சரியான நேரமா இல்லையா என்று விவாதம் நடந்து கொண்டிருக்கும் . இதை வாங்குங்கள் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாய்க்கு ஒரே நாளில் போகும் என்று சொல்வார்கள்.(இவர்களை பற்றி  ஒரு தனி பதிவே போடலாம் ).

10 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி ,30 இன்று  ருபாய் என்றால் அதன் விலை அதிகம் என்று எல்லோருக்கும் தெரியும் .சில வாரங்களில் விலை குறைய வாய்ப்புண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். அதே தக்காளி 30 ரூபாயில் இருந்து 50 ருபாய் போகும் என்று நீங்கள் நினைத்தால் ,அதற்கு சரியான காரணம் இருக்க வேண்டும் .2  மாதத்திற்கு பிறகு மழை  காலம் என்றால் ,தக்காளி இன்  விலை உயரும் . வெயில் காலம் என்றால் குறையும் ....அதே போல் தான் சரியான காரணம் இல்லா விட்டால் எந்த ஒரு பங்கையும் அதிக விலை கொடுத்து வாங்காதிர்கள் .

மேலே போன பங்கின் விலை குறையும் வரை காத்திருங்கள் அல்லது  ஒரு தரமான விலை குறைந்த மற்றொரு பங்கை வாங்குங்கள். அப்போது தான் லாபம் கிடைக்கும் . 

அது எப்படி ஒரு பங்கின் விலை அதிகமா இல்லையா என்று தெரிந்து கொள்வது ?

70 ருபாய் உள்ள பங்கு விலை குறைந்த பங்கு என்றோ 13000 ஆயரம் உள்ள MRF பங்கு அதிக விலை உள்ள பங்கு என்றோ நினைக்காதிர்கள் . (இது 9000 ஆயரம் விலை இருக்கும் போதே இது தரமான பங்கு என்று கண்டு பிடித்து விட்டேன் ஆனால் 9000 என்பது மிக மிக அதிகம் என்று நினைத்து வாங்காமல் விட்டு  விட்டேன். ;(  10  ரூபாய்க்கு 10 குச்சி மிட்டாய் வாங்கி வைப்பதை விட 10 ரூபாய்க்கு 2 Dairy milk மிட்டாய் சிறந்தது என்று அன்று தான் கற்றுக் கொண்டேன் ).


13000 ஆயரம் உள்ள MRF பங்கு விலை அதிகமான பங்கு அல்ல ,காரணம் அதன் PE  வெறும் 9.87 சதா விகிதமே . அதற்காக மட்டும்  வாங்கி விட முடியாது ,அந்த நிறுவனத்தின் எதிர்காலம் ,அதே இல் உள்ள மற்ற  பங்குகளின் விலை மற்றும் PE  என்ன என்பதையும் தெரிந்து வாங்க வேண்டும்.

பொதுவாக ,PE அதிகமாக இருந்தால் ,ஒரு பங்கு அதிக விலைஇல் வர்த்தகமாகி கொண்டிருகிறது என்று அர்த்தம் .குறைவாக இருந்தால் ஓரளவு குறைவான விலை இல் வர்த்தகமாகி கொண்டிருகிறது என்று அர்த்தம்...ஆனாலும் இதிலும் மாற்று கருத்து உண்டு.(இதை பற்றி எனது பழைய பதிவில் கூறி விட்டேன் .

70 ருபாய் உள்ள பங்கின் PE 30 என்றால் நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிரிர்கள்  என்று அர்த்தம்.சரியான காரணமில்லாமல் வாங்க வேண்டாம் .அந்த பங்கின் Industrial PE  என்ன என்பதையும் பார்க்கவும் . பொதுவாக PE 10 க்குள் இருக்கும் பங்குகளை நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றது . 

  


                                                                                                                        மீண்டும் சந்திப்போம்



4 comments:

  1. thank you for your good information..
    keep going bro....

    ReplyDelete
  2. Nanri,
    pls continue.....

    ReplyDelete