செய்தி தொலைக்காட்சிகள் பார்த்தாலே இது தானப்பா :: REPO /REVERSE REPO rate /CRR ratio /SLR ratio என்றால் என்ன

நாம் தொலைகாட்சி இல் செய்திகள் பார்க்கையில்  நிறைய தடவை இந்த வார்த்தைகள் நம் காதுகளுக்குள் விழுந்திருக்கும்.
"இந்திய reserve  வங்கி (RBI ) repo மற்றும் reverse  repo  விகிகதை    25 bps அதிகரித்து விட்டது ".
உடனே நாம் கிரிகெட் அல்லது மற்ற சேனல் ஐ மாத்தி விடுவோம்.காரணம் நமக்கு ஒன்னும் புரியாது ,அல்லது சலிப்பாக இருக்கும் .economics படித்தவர்களை தவிர ,இந்த வார்த்தைகள் மற்றவர்களுக்கு எட்டிக்காய் தான்(எனக்கும் தான் !!!).இவற்றின் அர்த்தங்களை கொஞ்சம் தமிழில் புரியும் படி விளக்கி இருக்கிறேன் .

முதலில் ஒரு பொதுவான ஒரு விளக்கத்தை கொடுத்து விடுகிறேன்.
பணவீக்கம்
நம்மிடம் காசு நிறயை இருந்தால் தான் அதிகமாக செலவு செய்வோம்.நிறைய பொருள்கள் வாங்குவோம்.
நாம் நிறைய பொருள் வாங்கினால் ,பொருட்கள்ளுக்கு தட்டு பாடு அதிகரித்து விலை கூடி விடும் ,விலை கூடினால் 1௦ ரூபாய்க்கு வாங்க வேண்டிய பொருளை 11  ருபாய் கொடுத்து வாங்க வேண்டி வரும் .
இது தான் பணவீக்கம் .
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து விட்டால் ,சேமிப்பு குறைந்துவிடும். இதை கட்டு படுத்த தான் ,இந்திய reserve  வங்கி ,பல முறைகளை கையாள்கிறது. அவை தான் repo /reverse  repo  rate /crr ratio /slr ratio என்பது.
அது சரி ,எப்படி நம்மிடம் உள்ள பணத்தை இவர்கள் எப்படி மறைமுகமாக கட்டு படுத்துகிறார்கள் ?.இந்த கேள்விக்கான பதிலை கடைசில் சொல்கிறேன்.
சரி இப்போ விசியத்துக்கு  வருவோம்.


repo  rate  :
வங்கிகள் தங்கள் பண தேவைக்காக ,சென்ட்ரல் பேங்க் அல்லது RBI (Reserve  bank  of  india ) விடம் கடன் வாங்குவார்கள்.அந்த சதவிகிதம் தான் repo  rate .
இப்படி கடன் வாங்குவதருக்கு ,அவர்கள் தங்களுடிய எதாவது ஒரு சொத்தினை அட மானம் வைத்து,பிறகு ஒரு குறிப்பிட்ட தேதி இல் அதை ஏற்கனவே ,நிர்ணைக்க பட்ட விலையில் திரும்ப வாங்கி கொள்வதாக அறிவிப்பார்கள்.
bank  rate :
bank  ரேட் என்பது , repo  ரேட் போல   வங்கிகள்  தங்கள்  பண தேவைக்காக , RBI (Reserve  bank  of  india ) விடம் கடன் வாங்குவார்கள்.ஆனால் சொத்தினை அடமானம் வைக்காமல் ,வாங்கிய பணத்திற்கு வட்டி கொடுத்து விடுவார்கள்.இந்த கடன் வாங்கும் ரேட் தான் bank  rate .
reverse  repo  rate :
இது repo  rate  கு நேர் மாறானது.
RBI  மற்ற  வங்கிகளிடம் இருந்து கடன் வாங்குவார்கள்.அதற்கு வட்டியும் குடுப்பார்கள்.அந்த வட்டி விகிதம் தான் இந்த reverse  repo  rate .
எதற்காக RBI வங்கிகளிடம் கடன் வாங்கு கிறார்கள் .


"வங்கிகளிடம் நிறைய பணம் இருந்தால் ,மக்களுக்கு நிறிய கடன் தருவார்கள்,இதனால் மக்கள் அதிக மாக செலவு செய்வார்கள்,அதிக மாக செலவு செய்தால் ,பொருட்களின் விலை ஏறிவிடும் (இது தான் பண வீக்கம்).
இப்போது RBI  மற்ற வங்கிகளிடம் இருந்து பணத்தை வாங்கி கொண்டால் ,மக்களுக்கு வங்கிகள் அதிக கடன் கொடுக்க முடியாது.இதனால் மக்களுக்கு கடன் குறைவாக கிடைக்கும்.அதனால் குறைவாக செலவு செய்வார்கள் ,பொருட்களின் விலை குறைந்து விடும் .(பண வீக்கம் குறைந்து விடும்)".
என்ன ஒரு வில்லத்தனம் என்கிறிர்களா :)
இது தான் reverse  repo  rate .
நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்து  விட்டதல்லவா .
இதே போல் தான் CRR  ratio மற்றும் SLR ratio வும்.


 CRR  ratio :(cash  Reserve  RATIO )
வங்கிகள் ஒரு குறிப்பிட்ட சதவிகித பணத்தை ,கையிருப்பில் வைத்திருக்க , RBI  உத்தர விட்டிருக்கும் .
எடுத்து காட்டாக : CRR rate 6  % என்று வைத்து கொள்வோம்.
நீங்கள் 100  ருபாய் வங்கி இல் சேமிகிறிர்கள் என்று வைத்து கொள்வோம் . வங்கிகள் அந்த 100  ரூபாயும் எடுத்து செலவு செய்திட முடியாது. 6  ருபாய் ஐ (6  % of   100)எடுத்து தனியாக வைத்து விட வேண்டும்.அதை செலவு செய்ய கூடாது. இதனால் வங்கிகளின் பணத்தின் கையிருப்பு அதிகமாகும் ,வங்கிகள் திவால் ஆவதில் இருந்து தடுக்க உதவும்.
இது தான் CRR  RATIO .
வங்கிகள் இந்த 6  ருபாய் ஐ rbi  இடம் கொடுத்து விடுவார்கள் .அவர்கள் இதற்கு ஒரு வட்டி போட்டு கொடுத்து விடுவார்கள்.
SLR ratio :(Statutory Liquidity Ratio.)
 rbi  கு ஒரு CRR RATIO பணம் கொடுத்தது போக ,மீண்டும் ஒரு சிறு தொகை ஐ தங்கம்,கடன் பத்திரங்கள், ஆகியவற்றில் வைத்திருக்க வேண்டும்.
eg : இப்பொழுது crr  rate  6 %  மற்றும் SLR rate 8  %  என்று வைத்து கொள்வோம்.
நீங்கள் 100 ருபாய் ஐ வங்கி இல் சேமித்தால்,வங்கிகள் 6  % பணத்தை rbi  கும் 8  % பணத்தை தங்கத்தில்/கடன் பத்திரத்தில் முதலீடு செய்து விட்டு ,மீதமுள்ள 84 ருபாய் ஐ தான் தங்கள் விருப்பம் போல கடன் குடுக்கவோ/செலவு செய்ய வோ முடியும்.
மேலே சொன்ன வகை கலை பயன் படுத்தி,நம் பொருளாதாரத்தின் ,பண வீக்கத்தை கட்டு படுத்திகிறார்கள்.
bps :
base  point  என்பதன் சுருக்கமே bps .
1 bps என்பது = 0 .01  % ஆகும். 25 bps  என்பது ௦.01 *25 =௦.25 %
இவ்வாறு வங்கிகளிடம் கொடுக்கும்/வாங்கும் பணத்தினை வைத்து ,rbi நமது பணவீக்கத்தை கட்டு படுத்து கின்றனர்.
-----------------------------------------------------------------------------------------------
இந்த பதிவு பிடித்திருந்தால் ,vote  செய்து ,உங்கள் நண்பர்களிடம் (face book,twitter) பகிர்ந்து கொள்ளுங்கள்.பதிவுகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயில் இல் பெற , வலது பக்கத்தில் "SUBSCRIBE" செய்து கொள்ளுங்கள்.அடுத்த பதிவில் எப்படி பங்குகளை விற்பது என்று சொல்கிறேன் .
 -Devaraj 
10 comments:

 1. மிக மிக அருமை நண்பரே! அனைவருக்கும் புரியும் விதமாக மிக எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள். நன்று. தொடருங்கள்.

  ReplyDelete
 2. நன்றிகள் பல...

  ReplyDelete
 3. நன்றி சுப்ரமணியன் ,தர்சன் அவர்களே !!!

  ReplyDelete
 4. வங்கிகள் 6 % பணத்தை rbi கும் 8 % பணத்தை தங்கத்தில்/கடன் பத்திரத்தில் முதலீடு செய்து விட்டு ,மீதமுள்ள 84 ருபாய் ஐ தான் தங்கள் விருப்பம் போல கடன் குடுக்கவோ/செலவு செய்ய வோ முடியும்.


  boss 8% மற்றும் 4% மீதி 86% தான வரும்.

  எவ்வளவு முக்கியமா பேசிட்டு இருக்கும் போது சின்னபுள்ள தனமா......கேட்டுட்டனோ

  sorry boss சும்மா ஒருவிளையாட்டுக்கு.

  அனைத்து பதிவுகளும் படித்தேன். நல்லா இருக்கு

  ReplyDelete
 5. வங்கித் தேர்வுக்கு தயார் செய்ய மிகவும் உதவியது. மிக்க நன்றி.

  ReplyDelete
 6. என் நீண்டகால தேடலுக்கு விடை கிடைத்தது. மிக்க நன்றி

  ReplyDelete
 7. super ! இதை தான் எதிர்பார்த்தேன் !நன்றி ...

  ReplyDelete
 8. useful post thank you.....

  ReplyDelete