Fixed deposit இல் பணம் போடும் முன்

                                 

 Fixed deposit இல் எப்படி  பணம்  போடுவது என்பது எல்லோருக்கும் தெரியும் . அப்படி போடும் முன் சில வழி முறைகளை பின்பற்றினால் லாபம் கூட கிடைக்கும்.இதுபற்றி  எனக்கு தெரிந்த சில நுணுகங்களை இங்கே பகிர விரும்புகிறேன்.




fixed deposit முழுவதும் பாதுகாப்பானது அல்ல.

பணம் போடும் வங்கி திவால் ஆனால் ,நீங்கள் போடும் பணம் கிடைக்க வாய்ப்பு  குறைவு.Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) இல்  நீங்கள் போடும் பணத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு மட்டுமே ,insurance தருகிறரர்கள் .அதாவது ஒரு முதலீட்டாளருக்கு ஒரு வங்கியில் (எல்லா கிளைகளையும்  சேர்த்து) அவர் சேமித்துள்ள பணத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு மட்டுமே insurance உண்டு  .வங்கி திவால் ஆனால் ,நீங்கள் எவ்வளவு போட்டு  வைத்திருந்தாலும் 
உங்களுக்கு 1 லட்சம் மட்டுமே கிடைக்கும்.
இதனை தவிர்க்க ,ஒரே வங்கியில் அனைத்து பணத்தையும் போடாமல் ,2 அல்லது மூன்று வங்கியில் பணம் போட்டால்  பணத்திற்கு பாதுகாப்பானதாக இருக்கும் .





பணத்தை பிரித்து fixed  deposit இல் போடுங்கள்.

உங்களிடம் 2 லட்சம் ரூபாய் இருக்கிறது என்றால் ,அதை ஒரு ஒரு லட்சமாக பிரித்து முதலீடு செய்யுங்கள் .ஏனெனில் நாளைக்கு உங்களுக்கு ஏதாவது அவசர தேவை என்றால் ,ஒரே ஒரு fixed deposit ஐ மட்டும் உடைத்து பணத்தை எடுத்து கொள்ளலாம் .மீதமுள்ள ஒரு லட்ச ருபாய் இன்னொரு deposit இல் நமக்கு வட்டியை தந்து கொண்டிருக்கும்.இதனால் நீங்கள் முதிர்வடையும் காலத்திற்கு முன்பே பணத்தை எடுத்ததற்கான அபராத தொகை குறையும் .

corporate deposits ,company deposits  எனப்படும் நிறுவனங்களின்  Fixed deposit  இல் பணம் போடுவது அதிக பாதுகாப்பில்லை ,அனால் அதற்கு எற்ப உங்களுக்கு வட்டி விகிதம் அதிகமாக கிடைக்கும.
முதலீட்டு  தொகையில் ஒரு சிறு தொகையினை இதில் போட்டால் கூடுதல் பணம் கிடைக்கும்....

தற்போதைய நிலையில் அதிக வட்டி தரும் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் .



முதலீடுகளை ஏணி போல உருவாக்குங்கள்:

உங்களிடம் 4 லட்ச ருபாய் இருந்தால் ,ஒரு ஒரு லட்சமாக ஒரு ஒரு வருடம் முதலீடு  செய்யுங்கள் .இதனால் ,நான்கு அடுத்த நான்கு வருடமும் உங்களின் ஒரு ஒரு இலட்ச ருபாய் முதிவடையும்,பிறகு அதை திரும்ப முதலீடு செய்யலாம் அல்லது உங்களின் உபயோகத்திற்கு பயன் படுத்தலாம்.

ஒரு ஒரு வருடமும் வட்டி விகிதம் அதிகம் /குறைவதால் ,வங்கிகள் அதிக வட்டி விகிதம் தரும் வருடத்தில் ,உங்கள் முதலீடு  செய்ய  முடியும்.இதனால் நமக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் .

அதிக வருடத்திற்கு முதலீடு செய்யாதீர்கள் :

ஒரு வங்கி 5 வருடத்திற்கு 10.75 % வட்டியும், 1 அல்லது 2 வருடம் முதலீடு செய்தால் 10 % வட்டியும் கொடுத்தால், 1 அல்லது 2 வருடத்தை மட்டும் தேர்வு செய்வது நல்லது.இதனால் 2 வருடத்தில் உங்களுக்கு பணம் கிடக்கும்,பிறகு அன்றைய கல கட்டத்திற்கேற்ப ,முதலீடு செய்ய பணம் இருக்கும்.இடையில் deposit ஐ உடைக்க வேண்டியதும் இல்லை.

மேலும் , post office  இல் பணம் போடுவது பற்றி இங்கே  படிக்க.
 பங்குசந்தைக்கு புதியவர் என்றால் இங்கு சென்று பங்குசந்தை என்ற தலைப்பின்  கீழ் சென்று படிக்கவும் .


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் .

7 comments:

  1. நல்ல பகிர்வு சகோ...

    தொடருங்கள்...

    ReplyDelete
  2. விளக்கத்துடன் பல தகவல்களுக்கு மிக்க நன்றி...

    பகிர்கிறேன்...

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  4. வணக்கம்
    ஒருவர் தன்னுடைய வங்கி கணக்கில் எவ்வளவு பணத்தை (குறைந்த பட்சம்)
    சேமிக்கலாம் ?

    ReplyDelete